டிரம்ப்பின் உண்மை முகத்தை வெளியிட்ட பிரபல பத்திரிகை: அதிரடி முடிவெடுத்த டிரம்ப்!

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் மோதுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டில் பெண்கள் குறித்து டிரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோவை ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை இப்போது வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து டிரம்ப் கூறியதாவது: நான் பெண்களை குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகளை அடிப்படையாக வைத்து என்னை மதிப்பிட வேண்டாம்.

நான் 100 சதவீதம் பரிசுத்தமான நபர் என்று கூறவில்லை. ஆனால் சிறந்த ஜனாதிபதியாக, குடிமகனாக இருப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments