மரணம் எப்படியும் ஏற்படும் என்பதற்கு ஓர் உதாரணம்: அமெரிக்காவில் ஒரு சோக சம்பவம்

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க நாட்டில் கார் ஓட்டிக்கொண்டு இருந்த மனைவியை அவரது கணவர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில் கடந்த சில வாரங்களாக கருப்பின நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இதே நகரில் வசித்து வரும் Claud “Tex” McIver என்ற நபர் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் காரில் வெளியே புறப்பட்டுள்ளார்.

வெளியே சாலையில் கருப்பின நபர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் தற்காப்பிற்காக துப்பாக்கியை அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

காரை மனைவி ஓட்ட அவர் பின் இருக்கையில் அமர்ந்து சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு, கருப்பின போராட்டாக்காரர்கள் அவ்வழியாக வருவதை பார்த்த அவர் துப்பாக்கிய வெளியே எடுத்து மறைவாக வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், வேகமாக சென்றுக்கொண்டு இருந்த கார் திடீரென ஒரு வேகத்தடை மீது பலமாக ஏறியுள்ளது. அப்போது, பின்னால் அமர்ந்திருந்த கணவரது உடல் குலுங்கியதும் கையில் இருந்த துப்பாக்கி வெடித்துள்ளது.

துப்பாக்கி வெடித்த வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு இருந்த அவரது மனைவியின் முதுகில் குண்டு பாய்ந்துள்ளது.

குண்டு காயம் பட்ட மனைவி ரத்த வெள்ளத்தில் காரை ஓரிடத்தில் மோதி நிறுத்தியுள்ளார். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கணவர் அவரது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால் அவரது மனைவி பரிதாபமாக பலியானார்.

காரில் பயணம் செய்தபோது எதிர்பாராத விபத்தில் கணவரால் மனைவி பலியாகியுள்ளது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments