கடவுளை கண்டுபிடிக்க போகிறேன்! 9 வயதிலேயே கல்லூரிக்கு சென்ற சிறுவன்

Report Print Raju Raju in அமெரிக்கா

தன்னுடைய ஒன்பது வயதுக்குள் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் பட்டப்படிப்பை படித்துவரும் அறிவாளி சிறுவன் எல்லாரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளான்.

Pennsylvania மாகாணத்தை சேர்ந்த பீட்டர் மற்றும் நான்ஸியின்மகன் வில்லியம் மைலீஸ்(9).

அறிவு களஞ்சியமான இந்த சிறுவன் தன் ஒன்பது வயதுக்குள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தற்போது கல்லூரியில் வான் இயற்பியல் சம்மந்தமான படிப்பை படித்து வருகிறான்.

எப்படி இது சாத்தியமானது?

வில்லியமின் பெற்றோர் கூறுகையில், வில்லியம் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே கணித எண்களை சுட்டி காட்டும் ஆற்றலை பெற்றான்.

ஏழு மாத குழந்தையாக இருக்கையில் நன்றாக பேசத் தொடங்கினான். அவன் ஒரு விடயத்தை பார்த்தால் பின்பு அதை மறக்க மாட்டான், நினைவிலேயே வைத்து கொள்வான் என கூறுகின்றனர்.

சக மாணவர்களை விட அவன் வயதில் குறைந்தவனாக இருந்தாலும் அவன் எல்லோரையும் போலவே கல்லூரியில் நடத்தப்படுவதாக வில்லியமின் கல்லூரி பேராசிரியர் கூறியுள்ளார்.

கல்லூரியில் வான் இயற்பியல் பட்ட படிப்பை படித்து வரும் சாதனை சிறுவன் வில்லியம் பேசுகையில், நான் சிறுவன் என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை, என் கவனம் எல்லாம் படிப்பின் மீது தான் இருக்கிறது.

இந்த உலக பிரபஞ்சமானது எப்படி நடைமுறைக்கு வந்தது என்பதை இந்த உலகுக்கு நிச்சயம் உணர்த்துவேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளான்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments