மொடல் அழகி பற்றி ஆபாச பேச்சு! மீண்டும் சர்ச்சையில் டொனால்ட் டிரம்ப்

Report Print Raju Raju in அமெரிக்கா

பத்து வருடங்களுக்கு முன் அழகான பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய ஓடியோ தற்போது வெளிவந்ததில் அதிர்ந்து போன அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் இவர் மீண்டும் அதே போன்ற ஒரு விடயத்தில் சிக்கியுள்ளார்.

அவ்வகையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஸ்காட்டி என்ற மாடல் அழகியை பற்றி அங்குள்ள நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் டொனார்ட் டிரம்ப் ஆபாசமாக அருவருத்தக்க வகையில் பேசியுள்ளார்.

அப்போது அவர் அணிந்திருந்த உடையில் அணிந்திருந்த மைக்ரோ போனில் இந்த பேச்சு பதிவாகியிருக்கிறது. இப்போது தேர்தல் நேரத்தில் அது வெளியாகி அவருக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த செயலுக்கு மன்னிப்பு கோரும் வகையில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் சாதாரணமாக பேசிய கருத்து இப்போது தேர்தல் நேரத்தில் வெளிவந்திருப்பது அரசியம் சாயம் பூசுவதற்காக தான் என தான் கருதுவதாகவும், இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணியத்துக்கு எதிராக பேசுபவரையா அதிபராக தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் மக்களை பார்த்து கேள்வியெழுப்பி உள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments