கணவரின் அன்பால் மரணத்தை வென்ற பெண்

Report Print Raju Raju in அமெரிக்கா

கலிபோர்னியாவை சேர்ந்த ராட் - ராச்சக் பரோக் என்னும் தம்பதி தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். திடீரென்று அவர்கள் வாழ்க்கையில் ஒரு புயல் வீசியது. அனொரெக்ஸிக் என்னும் விசித்திர நோய் ராச்சாக ப்ரோக்கை தாக்கியது.

அந்த நோயின் தாக்கம், பாதிப்பு குறித்து ராச்சாகின் கணவர் ராட் கூறியதாவது, நன்றாக சாப்பிட்டு வந்த என் மனைவிக்கு திடீரென்று பசியின்மை ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை நிறுத்தினார். 56 கிலோ எடையிருந்த அவர் மெது மெதுவாக குறைந்து வெறும் 18 கிலோ ஆனார் என அவர் கூறியுள்ளார்

இதற்கு காரணம் அனொரெக்ஸிக் என்னும் மென்டல் நோய் பிரச்சனை என மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். கணவர் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

அவரை தொடர்ந்து கவனித்து கொள்ள ராட் தன் வேலையையும் ராஜினாமா செய்தார். நிறைய சாப்பிட்டாலும் உடல் எடை கூடாது என்ற நிலைக்கு ராச்சாக் தள்ளப்பட்டார். இதனிடையில் ராச்சாக்கின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டி பொது மக்களிடம் நன்கொடை கேட்டார் ராட்.

200,000 டாலர்கள் கிடைக்க அதை வைத்து மருத்துவத்தை மேற்கொண்டர் அந்த தம்பதிகள். பின்னர் மருத்துவத்தினாலும், கணவரின் அரவணைப்பினாலும் கடந்த அக்டோபர் மாதம் இந்த நோயின் பிடியிலிருந்து ராச்சாக் பரோக் முழுவதும் மீண்டு தன் கணவரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments