என்னது கள்ளத்தொடர்பா? பிரபல நடிகை ஓபன் டாக்

Report Print Santhan in அமெரிக்கா

பிரபல ஹாலிவுட் ஜோடிகள் பிராட் பிட், ஏஞ்சலினா ஜுலி பிரிவதற்கு தான் காரணமில்லை என பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் கோட்டில்லார்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் வாழ பிடிக்கவில்லை என அவரது மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான ஏஞ்சலினா ஜுலி விவாகரத்து கோரியிருந்தார்.

நான் விவகாரத்து வாங்குவதற்கு பிராட்பிட்டுக்கும், பிரான்ஸ் நடிகை மரியான் கோட்டில்லார்ட்டுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு தான் காரணம் என ஏஞ்சலினா ஜூலி வெளிப்படையாக தெரிவித்தார்.

தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மரியான் கோட்டில்லார்ட் கூறுகையில், அவர்கள் இருவரும் பிரிவதற்கு தான் காரணம் இல்லை என்றும், தனக்கு ஏற்கனவே காதலன் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் தான் தற்போது கர்ப்பமாக இருப்பதற்கு பிராட் காரணமில்லை எனவும், இதற்கு தன் காதலர் தான் காரணம் என்றும், அவரைத் தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments