சிலந்தியால் ஏற்பட்ட விபத்து!

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள போர்ட்லேன்ட் சிட்டியில் நேற்று பெண் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரின் பின்புற கண்ணாடியில் ஒரு சிலந்தி வந்து உட்கார்ந்ததை பார்த்ததும், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் மோதி நின்றது.

அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இந்த விடயத்தை WSBT என்னும் செய்தி சேனல் வெளியிட்டுள்ளது.

இந்த சீசனில் அங்கு சிலந்தித் தொல்லை அதிக அளவில் இருக்கும் என்றும், எல்லோரும் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

போன வருடம் ஒரு பெண் சிலந்தியை கண்டு பயந்து, ஓடும் வாகனத்தில் இருந்து குதித்ததால் உள்ளே இருந்த அவரது 9 வயது மகனுக்கு அடிப்பட்டு அவன் சிறிய விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments