இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடைய அதிசய கன்றுக்குட்டி! விநோதமான வீடியோ!

Report Print Basu in அமெரிக்கா

இரட்டை தலை,இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடைய அதிசய கன்றுக்குட்டி ஒன்று அமெரிக்காவின் கெண்டுகி என்ற நகரில் பிறந்துள்ளது.

சம்பவம் குறித்து பண்ணையின் உரிமையாளர் ஸ்டான் மெக்கபின் கூறியதாவது, எங்கள் பண்ணையில் கடந்த வெள்ளி அன்று ஒரு கன்று குட்டி பிறந்தது. அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலை, 4 கண்களுடன் பிறந்தது.

பசு, கன்று குட்டியை ஈன்ற பொழுது, முதலில் இரட்டை கன்றுக்குட்டிகள் ஒரே நேரத்தில் பிறக்கின்றது என நினைத்தேன். அதன் பின்பு தான் அது இரண்டு தலைகளுடன் பிறந்த ஒரு கன்று என தெரியவந்தது.

இந்த கன்றுகுட்டி இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. தலையில் நடுவில் உள்ள இரண்டு கண்கள் பார்க்கும் திறனில்லாமல் உள்ளது.

இதுபோன்று பிறப்பதற்கு மரபணு திடீர் மாற்றமே காரணம். இவ்வாறு பிறக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் பெரும்பாலும் உயிரிழந்து விடும். ஆனால் இந்த கன்று குட்டி மிகவும் நலமாக உள்ளது. அதன் இரு வாயால் நன்றாக சாப்பிட முடிகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments