தனிமையே.. தனிமையே: காரணம் கிடைத்து விட்டது!

Report Print Jubilee Jubilee in அமெரிக்கா

தனிமை விரும்பியாக இருக்கிறீர்களா? தனிமை வாட்டுகின்றதே என கவலை கொள்கிறீர்களா? கண்டிப்பாக யாரையும் குறை கூறாதீர்கள். உங்களது மரபணுக்களை திட்டிக் கொள்ளுங்கள்.

ஆம், தனிமைக்கு மரபணுக்கள் முக்கிய காரணமாக இருப்பதாக கலிபோர்னியா பல்கலையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

San Diego என்ற ஆராய்சியாளர் இது தற்காலிகமாக இருக்காமல், வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது உடல்பருமனை விட மோசமானதாகவும், விரைவில் இறப்புக்கு வழிவகுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மனரீதியாகவும், உடல்ரீயாகவும் மோசமாக காணப்படுவதால் இவர்களுக்கு குறைந்த வாழ்நாளே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

10,760 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு அவர்களின் மரபணு மற்றும் உடல்நலம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதன் மூலமே தனிமைக்கு மரபணு முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இரு குழந்தைகளில் ஒருவர் நல்ல நிலையில் இருந்தால், மற்றொருவர் கண்டிப்பாக தனிமை விரும்பியாக இருப்பர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருமணம் ஆனவர்களை விட திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் தனிமையில் அதிகம் தவிப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments