கேட்டது வேறு உணவு, கிடைத்தது நாயின் கால்கள்: ரெஸ்டாரன்ட் சர்ச்சை

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவின் மாரிலேண்ட் பிராந்தியத்தில் Chinese Palace என்னும் உணவகத்துக்கு அஸ்லே ஜெபர்சன் என்னும் பெண் சாப்பிட சென்றுள்ளார்.

பன்றியின் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த அவரின் கண்களுக்கு நகங்கள் தென்பட்டது. பின்னர் அது பன்றி இல்லை, நாயின் கால்கள் என முடிவுக்கு வந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அந்த உணவை வீடியோவாக பதிவு செய்து தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்த உணவை சுகாதார துறைக்கு அனுப்ப போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதை மறுக்கும் வகையில் Chinese Palace உணவகம் தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தது.

அதில், எங்களுக்கு அந்த உணவு கப்பல் மூலமாக வந்தது, கண்டிப்பாக அது பன்றி தான், நாய் கால்கள் கிடையாது என கூறியிருக்கிறது.

மேலும் சுகாதார துறை அந்த உணவை ஆய்வு செய்து அது பன்றி தான் என சொன்ன சான்றிதழையும் தன் பேஸ்புக் பக்கத்தில் அந்த உணவகம் பதிவேற்றியுள்ளது.

இதனிடையில் என் பக்கம் தவறிருந்தால் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் தயார் என அஸ்லே ஜெபர்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments