தாயின் சந்தோஷத்திற்காக உழைக்கும் 8 வயது சிறுவன்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

தென்னைய நட்டா இளநீர்...பிள்ளைய பெத்தா கண்ணீர் என்ற பழமொழி இருக்கிறது.

இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில், சில பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை முறையாக கவனிக்காமல் தெருவில் அனாதையாக தவிக்கவிடுகின்றனர்.

ஆனால், இப்படி ஒரு பழமொழியே சமூகத்தில் முன்வைக்கப்பட தேவையில்லை என கூறியுள்ளார் கலிபோர்னியாவை சேர்ந்த 8 வயது சிறுவன்.

கலிபோர்னியாவில் வாடகை வீட்டில் தனது தாயுடன் வசித்து வரும் Jalen Bailey (8) என்ற சிறுவன், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளான்.

மேலும் தனது தாய்படும் கஷ்டத்தை உணர்ந்த இவன், தனது தாயின் சந்தோஷத்திற்காக சொந்த வீடு வாங்க வேண்டும் என முயற்சி செய்துள்ளான்.

அதன்பொருட்டு பேக்கரி ஒன்றை திறந்துள்ள இச்சிறுவன், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளான்.

மேலும் தனது பெயரில் இணையதளம் ஒன்றையும் ஆரம்பித்து அதன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு தனது பொருட்களை விற்பனை செய்து வருகிறான்.

இதுகுறித்து இச்சிறுவன் கூறியதாவது, நான் இவ்வாறு வியாபாரம் செய்வதற்கு உத்வேகம் கொடுத்தது எனது தாய் ஆவார். அவரும் என்னுடன் சேர்ந்து உணவுகளை தயாரிக்க உதவுகிறார்.

இந்த வியாபாரத்தின் மூலம் அதிக வருவாயை ஈட்டவேண்டும். அந்த வருமானத்தை வைத்து ஒரு சொந்த வீடு வாங்கி எனது தாயின் முகத்தில் சந்தோஷத்தை காணவேண்டும் என்பதே எனது நோக்கம் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments