உயிரை காப்பாற்றியவரை 19 வருடத்திற்கு பின் சந்தித்த வாலிபர்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த 1997ம் ஆண்டில் நீச்சல் குளத்தில் மூழ்கிய தன்னை காப்பாற்றிய பொலிசாரை 19 வருடங்களுக்கு பின்னர் வாலிபர் சந்தித்து நன்றி கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிஸ்டோபர் என்பவர் தன் ஐந்து வயதில் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருக்கையில், தண்ணீரில் மூழ்கும் நிலையில் தத்தளித்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த கொலம்பஸ் நகரத்தின் பொலிஸ் அதிகாரி ஜேம்ஸ் பூலி என்பவர் கிரிஸ்டோபரை காப்பாற்றினார்.

இது நடந்தது 1997ம் ஆண்டில், தற்போது கிரிஸ்டோபரின் வயது 25. இந்நிலையில் அவர் கிட்ட தட்ட 20 வருடங்கள் கழித்து பொலிஸ் அதிகாரி ஜேம்ஸ்யை சந்தித்தார். இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீங்கள் அன்று என்னை காப்பாற்றவில்லை என்றால், இன்று நான் இல்லை, என் மகளும் இல்லை என தன் ஐந்து வயது மகளை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதற்கு ஜேம்ஸ், நான் என கடமையை தான் செய்தேன் என்று புன்னகையுடன் கூறினார்.

பொலிஸ் அதிகாரியை பேஸ்புக் மூலம் இத்தனை வருடம் கழித்து கண்டுபிடித்ததாக கிரிஸ்டோபர் கூறுவதையும், அந்த நெகிழ்ச்சி சந்திப்பு வீடியோவையும் ஜேம்ஸ் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments