நியூயோர்க்கில் குண்டுவெடிப்பு: 25 க்கும் மேற்பட்டோர் காயம்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள செல்சாவில் பயங்கரமாக குண்டுவெடித்ததில் 25க்கும் மேலானோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள 23வது தெருவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், அங்கிருந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதற்கிடையே அதிகாரப்பூர்வமற்ற தகவலாக அப்பகுதியில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து வெடிகுண்டு வெடித்தது என்று தெரிவித்தன.

இதனை உறுதிசெய்யும் விதமாக, குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ள நியூயோர்க் பொலிஸ் சேதம் அடைந்த குப்பைத் தொட்டியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்து உள்ளது.

இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments