ரோபோமயமாகும் அமெரிக்கா: லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் நிலை

Report Print Aravinth in அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது அனைத்து துறைகளிலும் ரோபோவின் ஆதிக்கம் இடம்பெற்று வருவதால் வரும் 2021 க்குள் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது.

அமெரிக்காவில் தற்போது சராசரியாக சுமார் 14 கோடி பேர் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நவீன விஞ்ஞான வளர்ச்சி காரணமாக பல்வேறு துறைகளில் ரோபோக்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பல்வேறு நிறுவனங்களில் செலவு விகிதம் குறைவது மட்டுமல்லாது தரமும் பாதுகாக்கபடுகிறது. இதன் காரணமாக அனைத்து நிறுவனங்களும் ரோபோக்களையே பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலை தொடருமாயின் வரவிறுக்கும் 2021க்குள் லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வாளர் பிரியன் ஹாப்கின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர, தற்போது பரிசோதனை அடிப்படையில் இயங்கிவரும் தானியங்கி கார்கள் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும் போது, பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் டிரைவர்கள் இல்லாமல் இயங்கக்கூடிய கார்களையே பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments