ஊனமுற்ற மகளை கொடுமைப்படுத்திய தாய்: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

மெக்ஸிகோவில் தாய் ஒருவர் தனது ஊனமுற்ற மகளின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக நடத்தப்படும் சமூக சேவை மையத்திலிருந்து, தாய் ஒருவர் தன் மகளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

தனது மகள் ஊனமுற்றவர் என்று கூட பாராமல், அவளது தலைமுடியை பிடித்து சாலையில் தரதரவென இழுத்து சென்றுள்ளார்.

இந்த தாயின் இரக்கமற்ற செயல், சாலையில் இருந்தவர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை வீடியோ எடுத்த இரண்டு பெண்களில் ஒருவர் கூறுகையில், நான் எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் அந்த ஊனமுற்ற பெண்ணை விடவில்லை. தன் மகளை ஒரு நாய் போல அவர் நடத்துவதாக கூறியுள்ளார்.

இன்னொரு பெண் கூறுகையில், நான் அந்த சிறுமியிடம் எழுந்து நில் இல்லையென்றால் வீடு வரை நீ இப்படி தான் செல்ல வேண்டும் என கூறினேன்.

இருப்பினும் அந்த பெண்ணால் முடியவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் அந்த வீடியோவை கைப்பற்றி தகுந்த நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments