பொலிசாருக்கே விருந்து வைத்த 5 வயது சிறுவன்!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தாம் சேமித்த பணத்தில் தமது குடியிருப்பு பகுதியை பாதுகாக்கும் பொலிசாருக்கு 5 வயது சிறுவன் ஒருவன் விருந்து வைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

நியூ ஜெர்சி மாகாணத்தில் winslow township பகுதியில் குடியிருந்து வரும் தாரா எவர்ட்ஸ் என்பவர் அப்பகுதியில் உள்ள பொலிசாருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் தமது 5 வயது மகனது ஆசையையும் குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதியை இரவு பகல் பாராமல் பாதுகாத்துவரும் பொலிசாருக்கு தமது மகன் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்ய ஆசைப்படுவதாகவும், தமது மகன் தூங்கும் வேளையில் கூட அவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் பொலிசார் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும் என அவன் ஆசைப்படுவதாகவும் அந்த மின் அஞ்சலில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் விருந்து நிகழ்ச்சியை மனப்பூர்வம் ஏற்றுக்கொண்ட அப்பகுதி பொலிசார் குறிப்பிட்ட நாளினை தெரிவு செய்து அந்த மின் அஞ்சலுக்கு பதில் அனுப்பினர்.

பொலிசாருக்கு விருந்து வைக்கும் பொருட்டு சிறுவன் வில்லியம் 5 மாதமாக பணம் சேகரித்ததாக அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தனியார் உணவகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகளை பொலிசாருக்கு பரிமாறி சிறுவன் வில்லியம் மகிழ்ந்துள்ளான். இச்சம்பவத்தை பொலிசார் தங்களது பேஸ்புக் பக்கத்திலும் பதிந்து சுறுவன் வில்லியமுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இந்த தயாள உள்ளம் பொலிசாருக்கு உணவளித்ததுடன் நின்றுவிடவில்லை, ஆதரவற்றவர்களுக்கு உடை, பாடசாலைக்கு தேவையான பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் என வழங்கவும் முடிவு செய்துள்ளதாக அவரது தாயார் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments