ஒபாமா எதிரில் கூச்சலிட்ட சீன பாதுகாப்பு அதிகாரி: காரணம் என்ன?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சீனா விமான நிலையத்தில் இறங்கிய போது, இது எங்கள் நாடு, எங்கள் விமான நிலையம் என சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஒபாமா முன்னிலையில் கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனாவின் ஹாங்சூ நகருக்கு வருகை தந்துள்ளார்.

பொதுவாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு, வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர்களை அழைத்துச்செல்வார்.

அவர்களுக்கு ஜனாதிபதி ஒபாமாவின் அதிகாரப்பூர்வ விமானத்தின் அருகில் செல்வதற்கு கூட உரிமை உண்டு. இந்நிலையில் சீனாவில் ஜி20 மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக, அந்நாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கினார் ஒபாமா.

அதைத் தொடர்ந்து விமானநிலையத்தில் இறங்கிய ஒபாமாவின் அருகில் வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர்கள் செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்களை சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தடுத்தார். இதற்கு அப்பத்திரிக்கையாளர்கள் நடைமுறைகளை கூற, ஆவேசப்பட்ட அவர் இது எங்களுடைய நாடு, எங்கள் விமானநிலையம் என்று கடுமையாக வசைபாடியதாக கூறப்படுகிறது.

அதேப் போன்று ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரி சூசன் ரைஸுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments