விமான விபத்தில் காதலியை காப்பாற்றிவிட்டு தன்னுயிரை இழந்த காதலன்

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்கா நாட்டில் விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காதலியை காப்பாற்றி விட்டு காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லீன்ஸ் நகரில் ரெஜினால்ட் ஹிரால்ட் என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியன்னா என்ற காதலி ஒருவரும் இருந்துள்ளார்.

ரெஜினால்டிற்கு 25 வயது ஆன நிலையிலும் அவர் இதுவரை விமானத்தில் பயணம் செய்தது இல்லை.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் ரெஜினால்ட் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

ரெஜினால்டின் பிறந்த நாள் பரிசாக அவரை சிறிய ரக விமானத்தில் பயணிக்க வைக்க அவரது காதலி திட்டமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து விமானம் மற்றும் விமானி ஒருவரை ஏற்பாடு செய்த பிரியன்னா, ரெஜினால்ட்டை ஏற்றிக்கொண்டு பறந்துள்ளார்.

நகர் முழுவதையும் சுற்றி வந்தபோது காலநிலை மோசமடைந்து கடுமையான மழை பெய்துள்ளது. நிலைமையை உணர்ந்த அவர்கள் மூவரும் விமான ஓடுதளத்திற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, திடீரென விமானத்தின் மூக்கு பகுதியை மின்னல் ஒன்று தாக்கியுள்ளது. இதனால் விமானம் தள்ளாடியவாரு தரையை நோக்கி சென்றுள்ளது.

விமானத்திற்குள் இருந்த ரெஜினால்ட் உடனடியாக விமானத்தின் கதவினை காலால் பல முறை உதைத்து திறந்துள்ளார்.

அப்போது, விமானம் ஒரு ஏரியில் விழுவதற்கு சில வினாடிகள் முன்னாள் தனது காதலியை அவர் விமானத்திலிருந்து வெளியே தள்ளி விட்டுள்ளார்.

பிரியன்னா ஏரியில் விழுந்த அதே நேரத்தில் விமானமும் விழுந்து மூழ்கியுள்ளது.

இச்சம்பவத்தில் விமானத்திற்குள் சிக்கிய ரெஜினால்ட் மற்றும் விமானி ஆகிய இருவரும் பலியாயினர். பிரியன்னா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

விமான விபத்தில் தனது காதலியை காப்பாற்றிவிட்டு காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PRAYERS 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 I LOVE YOU & MISS YOU BABY !! (Sighs)

A photo posted by Briana Maria (Apple) (@pretty_popular_pharmtech) on

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments