அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆறு வயது சிறுமி!

Report Print Fathima Fathima in அமெரிக்கா
637Shares

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பாட்டு பாடி அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளார் ஹெவன்லி ஜாய் என்ற ஆறு வயது சிறுமி.

America Got Talent என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஹெவன்லி ஜாய்.

இவர் நேற்றிரவு கிளீவ்லான்டில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் பாட்டு பாடி அசத்தியுள்ளார்.

அதாவது, ''உலகத்தில் பரவிவரும் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து உலகத்தில் அமைதி பரவ வேண்டும்'' என்ற பாடல் ஒன்றை பாடினார்.

மேலும் இதன் போது பேசிய டொனால்டு டிரம்ப், நான் ஜனாதிபதியானால் விரைவில் குற்றங்களும் வன்முறைச் சம்பவங்களும் முடிவுக்கு கொண்டு வரப்படும். மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments