வானத்தில் இருந்து வீட்டின் மீது விழுந்த விமானம்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
வானத்தில் இருந்து வீட்டின் மீது விழுந்த விமானம்
430Shares

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வானத்தில் இருந்து விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் விமானி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிகாகோ நகரில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த தெருவில், இந்த விமானம் வீட்டின் மீது விழுந்துள்ளது, இதில் விமான ஓட்டுநர் உயிரிழந்துள்ளார், மேற்படி யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

விபத்திற்குள்ளான வீட்டில், ஒரு பெண்ணும், நாயும் வசித்து வந்துள்ளனர், அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை, விபத்து குறித்து அருகில் வசிப்பர்வர்கள் கூறியதாவது, வானத்தில் இருந்து கண்ணி வெடி விழுந்து வெடித்தது போன்ற சத்தம் கேட்டது.

விரைந்து சென்று பார்க்கையில், வீடு மற்றும் வீட்டில் இருந்த பூங்கா பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது, மேலும் விமானத்தின் பாகங்களும் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தன, இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர், அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக விபத்து நேர்ந்துள்ளது என்றும் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments