திருடனுக்கு 5 லட்சம் டொலர் அபராதம்! அதிரடி உத்தரவிட்ட நீதிபதி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
336Shares

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவரை கத்திமுனையில் மிரட்டி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த குற்றச்சாட்டுக்காக நபர் ஒருவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த நபரை 5 இலட்சம் அமெரிக்க டொலர் அபராத பிணையுடன் விடுதலை செய்யுமாறு நீதவான் நேற்று உத்தவிட்டுள்ளார்.

சம்பவத்தில் 74 வயதுடைய பெண்னையே 44 வயதுடைய குறித்த நபர் தாக்கியுள்ளார்.

நேற்றைய தினம் சந்தேக நபரான Mabone நீதிமன்றில் முன்னிலையான போதே நீதவான் Donald Panarese இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் இரண்டு ஆயுதங்களையும் வீட்டில் உள்ள பொருட்களையும் கொள்ளை அடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அந்த பெண்ணின் வாயை கட்டிவிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டார்

எனவும் தற்போது குறித்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Mabone என்பவர் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணின் கார் சாவி மற்றும் ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காலில் தப்பியோடியதாக குறித்த பெண் பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பை ஏற்படுத்தி சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த கார் சிறிய தூரம் சென்றதுமே பொலிஸார் Maboneஐ கை செய்துள்ளனர்.

Mabone என்பவர் போதை வர்த்தகம் மற்றும் ஏனைய காரணங்களுக்காக முன்னரும் கைது செய்யப்பட்டடிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments