பேஸ்புக் லைவ்-ல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்!

Report Print Fathima Fathima in அமெரிக்கா
பேஸ்புக் லைவ்-ல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்!
265Shares

அமெரிக்காவில் முகநூலில் வீடியோ சாட்டிங்கில் பேசி கொண்டிருந்த போதே மூன்று இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இணையதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் விர்ஜினியா பகுதியை சேர்ந்த டி.ஜே வில்லியம்ஸ் என்பவர் தனது காரில் அமர்ந்தபடியே முகநூல் பக்கத்தின் வீடியோ சாட்டிங்கில் பேசிக் கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் 2 பேரும் பாடல் கேட்டபடியே வில்லியம்ஸை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தனர்.

அப்போது திடீரென்று அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வில்லியம்ஸ் பேசிக்கொண்டிருந்த வீடியோ சாட்டிங்கில் பதிவாகியிருந்தது. இதில் 20 முறை துப்பாக்கி சுடும் சத்தம் மட்டும் சுமார் 5 நிமிடங்கள் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவில் அமைதியாக இருங்கள், பொறுமையாக இருங்கள் என்ற ஒலியும் பதிவாகி இருநத்து.

இந்நிலையில் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டினியோ பெர்கின்ஸ் என்பவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நோர்போக் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments