மெக்டொனால்ட் உணவகத்தில் ஊழியரை அடித்து துவைத்த பெண்கள்

Report Print Fathima Fathima in அமெரிக்கா
976Shares

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்திற்கு சாப்பிட சென்ற பெண்கள் அங்கிருந்த ஊழியரை அடித்து துவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரு பெண்களும் தங்களுக்கு வேண்டிய உணவினை ஆர்டர் செய்துவிட்டு வந்து அமர்ந்து உள்ளனர், ஆனால் அவர்கள் ஆர்டர் செய்த உணவு சரியான முறையில் வழங்கப்படவில்லை.

இதனால் கோபம் கொண்ட பெண்கள் தங்கள் இடத்தை விட்டு எழுந்து சென்று ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் வாக்குவாதம் முற்றவே கோபம் கொண்ட பெண்கள் அங்கிருக்கும் உணவுகளை எடுத்து வீசியதோடு மட்டுமல்லாமல், ஊழியரையும் அடித்து துவைத்துள்ளனர்.

இதனைப்பார்த்த சக ஊழியர்கள் தடுக்க முயற்சித்தபோது, ஆக்ரோஷம் அடங்காத அப்பெண்கள் மீண்டும் தாக்க முயற்சித்துள்ளனர், இந்த சம்பவத்தை பார்த்த பிற வாடிக்கையாளர்கள் உற்சாக மிகுதியில் கரகோஷங்களை எழுப்பி, அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மேலாளர் பொலிசாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த உள்ளூர் பொலிசார் அப்பெண்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து மேலாளர் கூறியதாவது, நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யவே விரும்புகிறோம், சில நேரங்களில் தவறுகள் நடந்தாலும் இவ்வளவு ஓழுங்கீனமாக நடந்துகொள்ளக்கூடாது,

இருப்பினும் இவர்களின் இந்த மோசமான நடவடிக்கையால் பிற வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments