ஒபாமாவுக்கு பதிலடி கொடுத்த டிரம்ப்

Report Print Fathima Fathima in அமெரிக்கா
ஒபாமாவுக்கு பதிலடி கொடுத்த டிரம்ப்
694Shares

ஆர்லாண்டோ தீவிரவாதியை விட என் மீது தான் ஒபாமாவுக்கு கோபம் அதிகம் என குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஐ.எஸ் ஆதரவாளர் நடத்திய கொடூர தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த டிரம்ப், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சிக்கல் இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒபாமா, முஸ்லிம் விரோத கொள்கையை டிரம்ப் கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என டிரம்ப் கூறிவருகிறார்.

இது ஒட்டுமொத்த சமுதாயத்தையே வன்முறையாளர்களாக சித்தரிக்கும் முயற்சி. ஒருவருடைய மத நம்பிக்கையைவைத்து மட்டுமே அவர்களை புறக்கணிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய டிரம்ப், ஆர்லாண்டோ தீவிரவாதியை விட தன் மீது ஒபாமாவுக்கு கோபம் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒபாமா மோசமான அதிபர், நமது நாட்டில் தற்போது நடக்கும் ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் கேடு விளைவிப்பவை எனவும் பதிலளித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments