புளோரிடா சம்பவம்: கொலையாளியின் வீட்டினை சோதனையிட்டதில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
புளோரிடா சம்பவம்: கொலையாளியின் வீட்டினை சோதனையிட்டதில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்

புளோரிடா மாகாணத்தில் உள்ள Pulse இரவு விடுதியில் யூன் 12 ஆம் திகதி 50 பேரை கொன்று வெறியாட்டம் நடத்திய நபரின் வீட்டினை சோதனையிட்டதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள Fort Pierce நகரில் உள்ள 107 ஆம் நம்பர் குடியிருப்பில் Omar Mateen வசித்து வந்துள்ளார்.

முதல் திருமணம் ஆனது முதலே அக்குடியிருப்பில் வசித்து வந்த இவர், முதல் மனைவி விட்டுச்சென்ற பின்னர், வேறொரு பெண்ணை மணம் முடித்துக்கொண்டு, அதே குடியிருப்பில் தனது வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.

இவருக்கு 3 வயதில் Noor Zahi Salman என்ற மகன் உள்ளார், இரண்டு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளான, Spiderman bike, toy trucks மற்றும் Mickey Mouse posters போன்றவைகளே அதிகமாக இருந்துள்ளன.

இதன் முலம் இவர் குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் என தெரியவந்துள்ளது, மேலும் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அதிகமாக இருந்துள்ளன.

அதுமட்டுமின்றி இஸ்லாமியரான குரான் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.

குரான் மற்றும் இஸ்லாம் தொடர்பான புத்தகங்களை படிப்பதில் அதிக ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். மதக்கோட்பாட்டின்படி அதிக நம்பிக்கை கொண்ட காரணத்தினாலே இவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், இவர் தனது காலண்டரில் 'D-Day, 10:30 pm - June 7 (முக்கியமான நாள்) என குறித்து வைத்துள்ளான், அதன் பின்னர் இந்த திகதியை மாற்றி June 6 என மாற்றியுள்ளான்.

ஆனால், திட்டமிட்டபடி இந்த 2 திகதிகளையும் புறக்கணித்துவிட்டு யூன் 12 ஆம் திகதி தனது வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளான் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்நபர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் தான் என அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments