ஐரோப்பாவிலேயே 100,000 கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த முதல் நாடு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

ஐரோப்பாவிலேயே 100,000 கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த முதல் நாடாக பிரித்தானியா ஆகியுள்ளது.

பிரித்தானியாவில் 100,162பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். கடந்த ஏழு நாட்களில், சராசரியாக நாளொன்றிற்கு 1,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள்.

உலக அளவில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்சிகோவைத் தொடர்ந்து 100,000 கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த ஐந்தாவது நாடு பிரித்தானியா ஆகும்.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, மேலும் கொரோனா பரவலைத் தவிர்க்கும் வகையில், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன, அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில், இருவராக உடற்பயிற்சி செய்வது தவிர்த்து, மற்றபடி பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்