ஐசியூவில் வைத்து அவசர அவசரமாக காதல் ஜோடி செய்த செயல்! பிரித்தானியாவில் நடந்த ஆச்சரிய சம்பவம்...

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
202Shares

பிரித்தானியாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட காதல் ஜோடிகள் இக்கட்டான சூழ்நிலையில் ஐசியூவில் வைத்து திருமணம் செய்த்துக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய காதல் ஜோடிகளான எலிசபெத் கெர் (31) மற்றும் சைமன் ஓ பிரையன் (36) ஆகியோர் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், சமீபத்தில் இருவருமே ஒரே சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது அவர்களை மிகவும் கவலை அடையச் செய்தது.

இருவரும் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அளவு ஆபத்தான அளவில் குறைந்த நிலையில், ஒரே ஆம்புலன்சில் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் கெர் மற்றும் பிரையன் மிகவும் நோய்வாய்ப்பட்டனர். இந்த நிலையில், மருத்துவ ஊழியர்கள் இவர்களுக்கான திருமணத்தை ஏற்பாடு செய்ய முயற்சித்தனர்.

ஆனால், அதற்குள் பிரையனின் உடல்நிலை இன்னும் மோசமடைந்தது கோமா நிலைக்கு சென்றதையடுத்து, ​​அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஐ.சி.யூ வரை சென்ற கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதங்கள் இப்போது 80 சதவீதமாக இருப்பதால், அவர் குணமாகி திரும்புவார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில், எலிசபெத் ஒரு முடிவை எடுத்தார்.

பிரையன் ஐசியூக்கு கொண்டுசெல்லப்படும் நேரத்தில் திருமணம் செய்துகொள்வதாக Kerr கூறினார்.

அவரது வற்புறுத்தலின்படி, மறுத்துவ ஊழியர்கள் அவரை ஐசியூவிற்குள் கொண்டுசெல்வதை சற்று தாமதப்படுத்தினார். சிறிது நேரத்தில் அவர்கள் அங்கேயே திருமணமும் செய்து கொண்டனர்.

ஐசியூவில் சிகிச்சை பெற்ற நிலையில் இப்போது, பிரையனின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இருவருமே இப்போதும் ஆக்ஸிஜனைபெற்றுவரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு கொடுக்கவேண்டிய முதல் முத்தத்திற்காக இன்னும் சில நாட்கள் நாங்கள் காத்திருப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்