கொரோனாவுக்கு பயந்து வீடு திரும்பிய பிரித்தானியர்: தூக்கத்தில் உயிர் பிரிந்த துயரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
231Shares

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சையை பாதியில் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய இளம் தந்தை ஒருவர் தூக்கத்தில் மரணமடைந்துள்ளார்.

கில்ட்ஃபோர்ட், சர்ரே பகுதியில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தவர் 27 வயதான டேவிட் வார்னர்.

இந்த மாத துவக்கத்தில் இவருக்கு மார்பில் வலி ஏற்பட்டதாக மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனால் இவரை கொரோனா நோயாளிகளுக்கான அறை ஒன்றில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட் வார்னர், தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அது தமது குடும்பத்திற்கு பரவ நாம் காரணமாக அமைந்துவிடுவோமோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவர்களிடம் கூறிவிட்டு சிகிச்சையை பாதியில் நிறுத்தி, குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

ஆனால், மருத்துவமனையில் இருந்து திரும்பிய அடுத்த நாளே, டேவிட் வார்னர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, அவரது கொரோனா முடிவுகள், பாதிப்பில்லை என தெரிய வந்துள்ளது.

தமக்கு 6 மாத குழந்தை ஒன்று இருக்கிறது. எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக எனது பிள்ளைக்கு அந்த நோயை அளிக்க நான் விரும்பவில்லை,

மாரடைப்பு வந்தால் கூட நான் தாங்கிக் கொள்வேன், ஆனால் எனது பிள்ளைக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்த என்னால் முடியாது என டேவிட் வார்னர் தமது மனைவியிடம் வாதிட்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய அன்று இரவு, முழு நேரமும் தமது 6 மாத குழந்தையை பராமரிப்பதிலேயே டேவிட் வார்னர் நேரத்தை செலவிட்டுள்ளார்.

இரவில் குழந்தை லேசாக அழும் சத்தம் கேட்டதும், உடனே கண் விழித்து, குழந்தையுடன் அடுத்த அறைக்கு சென்று அழுகையை நிறுத்த முயற்சித்தார் என அவரது மனைவி கண்கலங்கியுள்ளார்.

டேவிட் தூக்கத்தில் மரணமடைந்துள்ளதை அறிந்ததும் எனது உலகம் முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் என்றார் டேவிட்டின் மனைவி.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்