ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க... உருக்கமான கோரிக்கை வைத்த பிரித்தானிய பிரதமர் ஜோன்சன்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
654Shares

கொரோனா தடுப்பூசி அளிக்கும் திட்டம் முழுவீச்சில் நடந்தேறி வந்தாலும், வார இறுதி நாட்களில் குடியிருப்பை விட்டு வெளியேறும் முன்னர் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இங்கிலாந்து இன்னும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக பிரதமர் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.

தடுப்பூசியால் கொரோனாவை முற்றாக ஒழிக்க நம்மால் முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் ஜோன்சன்,

இந்த போராட்டத்தில் மக்களின் பங்களிப்பும் தேவை என்பதால், இந்த வார இறுதியில் மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

ஐரோப்பாவில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட நூறாயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளோம் என தெரிவித்துள்ள பிரதமர் ஜோன்சன்,

அந்த திட்டம் முழுமையடையும் வரையில், கொரோனா பரவலை நாம் கண்டிப்பாக கட்டுக்குள் வைக்க வேண்டி உள்ளது என்றார்.

மேலும், பிரித்தானியாவில் மூன்றில் ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத கொரோனா தொற்று இருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ள அவர்,

அவர்களே தங்களுக்கு தெரியாமல் அதிகமானோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பிரதமர் ஜோன்சன் குறிப்பிட்டார்.

அது, கண்டிப்பாக உங்களில் ஒருவராக கூட இருக்கலாம் என தாம் பயப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக கருதியே, இந்த வார இறுதி நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்வதில் இருந்து பின் வாங்குங்கள் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்