பிரித்தானியாவில் பரவிய புதிய கொரோனா வைரஸ் 50 நாடுகளுக்கு பரவி விட்டது! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WHO

Report Print Santhan in பிரித்தானியா
210Shares

புதிய வகை கொரோனா வைரஸ் 50 நாடுகளுக்கு பரவிவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவலை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது/

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் பரவி பல லட்சம் மக்களின் உயிரை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், 70 சதவீதம் அதிக வேகமாக பரவக் கூடியது என்பதால், இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக பல நாடுகள்

பிரித்தானியா இடையேயான விமான பயணங்களுக்கு தடை விதித்தன.

இருப்பினும் தடை அமலுக்கு வருவதற்கு முன் பயணம் மேற்கொண்டவர்களால் பல்வேறு நாடுகளுக்கு புதிய கொரோனா பரவிவிட்டது.

இந்நிலையில், 50 நாடுகளுக்கு புதிய கொரோனா பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக சோதனை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவைப் போன்றே தென்னாப்பிரிக்காவில் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் சுமார் 20 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸால் உடல்நிலைக்கு மோசமான விளைவுகள் ஏற்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வைரஸ்களுமே உலகளவில் எவ்வளவு வேகத்தில் பரவும் என்பது குறைத்து மதிப்பிடப்படுவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்