லண்டன் விடுதியில் சூட்கேஸுக்குள் சடலமாக இருந்த பெண்! வேறு நாட்டுக்கு தப்பிய முக்கிய நபர்.. இறந்த பெண்ணின் முதல் புகைப்படம்

Report Print Raju Raju in பிரித்தானியா
420Shares

லண்டனில் உள்ள விடுதியில் சூட்கேஸுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் பொலிசார் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மேற்கு லண்டனில் உள்ள ஒரு தனியார் விடுதியில் Joanna Borucka (41) என்ற பெண்ணின் சடலத்தை சூட்கேசில் இருந்து பொலிசார் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கைப்பற்றினர்.

இந்த வழக்கை கொலை வழக்காக பொலிசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் தொடர்புடைய Petras Zalynas (50) என்ற Lithuania நாட்டை சேர்ந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

அவர் தற்போது லண்டனில் இருந்து தப்பி ஜேர்மனியில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஐரோப்பிய சகாக்களுடன் இணைந்து பணியாற்றி வருவதோடு பொதுமக்களின் உதவியையும் கோருகின்றனர்.

Petras-ஐ பிடித்து விசாரித்தால் தான் Joannaவுக்கு நடந்தது என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்