பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபருக்கு புதிய வகை கொரோனா உறுதி! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
143Shares

பிரித்தானியாவில் இருந்த இலங்கை வந்த நபரிடம் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் இப்போது பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸாக மாறி, அங்கு தீவிரமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக பிரித்தானியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு வரும் மக்களை அந்தந்த நாட்டு அரசு தீவிரமாக கவனித்து அதன் பின்னரே அனுமதிக்கிறது.

ஒரு சில நாடுகளில் பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபரிடம் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் மருத்துவர் சுதாத் சமரவீர கூறுகையில், சமீபத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரிடம் புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதை ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் பீடம் மற்றும் கொரோனா குறித்த பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மருத்துவர் சுதத் சமரவீரா, புதிய கொரோனா வைரஸ் மிகவும் பரவக்கூடியது மற்றும் நாட்டில் தற்போதுள்ள விகாரத்திற்கு வித்தியாசமாக செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த புதிய கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டு நிலையில், இதுவரை புதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் சமூகத்தில் புதிய பரவல் ஏற்படுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்