பிரித்தானிய மகாராணியாரின் உறவினருக்கு சிறை... குடிபோதையில் இளம்பெண்ணின் அறைக்குள் நுழைந்து செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
392Shares

பிரித்தானிய மகாராணியாரின் உறவினர் ஒருவர், தங்கள் மூதாதையர் இல்லத்திற்கு விருந்தினராக வந்திருந்த இளம்பெண் ஒருவர்மீது, முரட்டுத்தனமாக பாலியல்தாக்குதல் நடத்தியதற்காக சிறை செல்ல இருக்கிறார்.

மகாராணியாரின் தாயின் வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏராளமான விருந்தினர்கள் வந்திருந்த நிலையில், மகாராணியாரின் உறவினரான Simon Bowes Lyon (34) என்பவர், Glamis Castle என்னும் அந்த மாளிகையில் தங்கியிருந்த ஒரு இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.

விருந்தின்போது Simonஇடம் யாரும் பேசாமல் இருப்பதைக் கவனித்த அந்த இளம்பெண், பரிதாபப்பட்டு அவரிடம் சென்று பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

அன்று இரவு அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு தூங்க சென்றுவிட்ட நிலையில், நள்ளிரவு மணி 1.20க்கு அந்த பெண்ணின் அறைக்கதவு தட்டப்பட்டுள்ளது.

அவர் கதவைத்திறந்து யாரென்று பார்க்க, அங்கே Simon நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவசரமாக பேச வேண்டும் என்று கூறி, அந்த இளம்பெண்ணை தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த Simon, அந்த பெண்ணை படுக்கையில் தள்ளி அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார்.

கடுமையான குடிபோதையிலிருந்த Simon, அந்த பெண்ணுடன் தான் முறைதவறிய உறவு வைத்துக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

20 நிமிடங்கள் Simonஇடம் இருந்து தப்ப போராடிய அந்த இளம்பெண் ஒரு வழியாக அவரை அறைக்கு வெளியே தள்ளிவிட்டு சத்தமிட, இரண்டாவது முறையும் அறைக்குள் நுழைந்தSimon, அந்த பெண்ணின் உடைகளை களைய முயன்று அவரை தவறாக தொட்டும் இருக்கிறார்.

தன்னை முத்தமிட முயன்ற Simonஇடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடிய அந்தபெண்ணை, நாகரீகமற்ற, மட்டமான, மோசமான மற்றும் பயங்கரமான பெண் என விமர்சித்தSimon, என் சொந்த வீட்டுக்குள் நான் என்ன செய்யவேண்டும் என்று நீ சொல்லக்கூடாது என அந்த பெண்ணிடம் கத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், அந்த பெண்ணின் சத்தம் கேட்டு மற்றொரு விருந்தினர் உதவிக்கு வந்துள்ளார்.

மறுநாள் காலை எழுந்ததும் முதல் வேலையாக மாளிகையிலிருந்து ஓட்டம் பிடித்த அந்த பெண், நடந்த பயங்கரம் குறித்து பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

நேற்று நீதிமன்றம் முன்பு Simon தன் தவறை ஒப்புக்கொண்ட நிலையில், அவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்