தொடர்ந்து விதிகளை மீறினால்... கடுமையாகவிருக்கும் கட்டுப்பாடுகள்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
195Shares

தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் மீறினால், இனி இரண்டு பேர் சந்திக்கக்கூட அனுமதி மறுப்பு முதலான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்என எச்சரிக்கப்பட்டுள்ளனர் பிரித்தானியர்கள்.

இந்த வார இறுதிக்குள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டாலொழிய, கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க அமைச்சர்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் பட்சத்தில் புதிதாக என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்படும்?

உடற்பயிற்சி செய்வதற்காக இரண்டு பேர் வெளியிடங்களில் கூடலாம் என அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்குகூட இனி நீக்கப்படலாம்.

எஸ்டேட் ஏஜண்டுகள், வெளியிட சந்தைகள், click-and-collect retail என்னும் ஒன்லைன் வகை வர்த்தகம் ஆகியவற்றை கூட நிறுத்த சில அமைச்சர்கள் கோரிவருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அறிவியலாளர்கள், இரண்டு மீற்றர் சமூக இடைவெளியை மூன்று மீற்றர் இடைவெளியாக அதிகரிக்க வற்புறுத்திவருகின்றனர்.

இப்படி கடுமையான மாற்றங்களை அறிமுகம் செய்யவேண்டுமானால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பிரச்சினைகள் நாட்டில் எந்த அளவுக்கு தீவிரமாக உள்ளன என்பதைக் காட்டும் தெளிவான புள்ளிவிவரங்கள் அளிக்கப்படவேண்டும்.

அவை, இந்த வார இறுதியில் அவருக்கு அளிக்கப்படும், நிலைமையின் தீவிரத்தைப் பொருத்து அவர் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுப்பார்.

இந்நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் இருப்பது முன்னெப்போதைக்காட்டிலும் இப்போது அதிக அவசியமாகியுள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்