பிரித்தானியாவில் இனி இதற்கு அனுமதி! பிரதமர் போரிஸ் செய்த செயலை அடுத்து.. காவல்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
743Shares

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளூர் மிதிவண்டி பயணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று பிரித்தானியாவின் காவல்துறை அமைச்சர் கிட் மால்தவுஸ் கூறினார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன், டவுனிங் தெருவில் இருந்து கிழக்கு லண்டனில் உள்ள ஒலிம்பிக் பூங்காவிற்கு, சுமார் ஏழு மைல் மிதிவண்டியில் பயணம் செய்ததாக விமர்சிக்கப்பட்டதை அடுத்து கிட் மால்தவுஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

உடற்பயிற்சி செய்யும் போது மக்கள் உள்ளூர் வட்டாரத்திற்குளே இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இப்போது உள்ளூர் என்பது வெளிப்படையான விளக்கத்திற்குரியது, ஆனால் உள்ளூர் என்றால் என்ன என்பதை மக்கள் பரவலாக அறிவார்கள்.

மக்கள் உண்மையிலேயே உடற்பயிற்சி செய்கிறீர்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக சமூக நோக்கங்களுக்காக வெளியே செல்லவில்லை என்றால், அது மிகவும் நியாயமானது என காவல்துறை அமைச்சர் கிட் மால்தவுஸ் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்