சமூக இடைவெளிக்கான தூரத்தை அதிகரிக்கும் கட்டாயத்தில் பிரித்தானியா! என்ன முடிவெடுப்பார் போரிஸ் ஜான்சன்?

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
217Shares

விஞ்ஞானிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பொது இடங்கள் மற்றும் பொதுவெளியில், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கான தூரத்தை அதிகரிக்கும் கட்டாயத்தில் பிரதமர் போரில் ஜான்சன் தள்ளப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 931 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 46,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 529 பேர் இறந்துள்ளனர்.

இதமூலம் பிரித்தானியாவில் இதுவரை மொத்தம் 3,118,500 பாதிப்புகளும், 81,960 இறப்புகளும் அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில், பிரித்தானியா அதன் 3-வது தேசிய ஊரடங்கில் இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்றுக்களையும் உயிரிழப்புகளையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசாங்கம் மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவின் SAGE (Scientific Advisory Group for Emergencies) விஞ்ஞானிகள் குழு, சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான தூரத்தை 1 மீட்டர் பிளஸ் என்பதிலிருந்து 2 மீட்டர் பிளஸாக மாற்றவேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனிடன் வலியுறுத்தியுள்ளது.

இதனால், எந்நேரத்திலும் சமூக இடைவெளி தூரத்தை அதிகரித்து உத்தரவிடும் அழுத்தத்தில் போரிஸ் ஜான்சன் இருக்கிறார்.

இந்த 2 மீட்டர் பிளஸ் விதிமுறை செயப்படுத்தப்பட்டால், நடைமுறையில் இது 3 மீட்டராக மாறும், அதாவது கிட்டத்தட்ட 10 அடியாகும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய சுகாதார செயலாளர், 'தேவைப்பட்டால் மேலதிக நடவடிக்கைகளை நிராகரிக்க மாட்டேன்' என்று கூறினார்.

மேலும், மூன்று மீட்டர் விதி விதிக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, "சமூக தொலைதூர விதிகளை மாற்ற தற்போதைய திட்டங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், அனைத்தும் மதிப்பாய்வில் வைக்கப்பட்டுள்ளன" எனகே கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்