வெள்ளிக்கிழமை முதல் பிரித்தானியா வருபவர்களுக்கு.. புதிய விதிமுறைகளை வெளியிட்ட அரசாங்கம்! மீறினால்..?

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
502Shares

பிரித்தானியாவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் கடுமையான சர்வதேச போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவுள்ள நிலையில், அது குறித்த விதிமுறைகள் மற்றும் விலக்குகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து பிரித்தானியா செல்லும் மக்கள் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை சோதித்ததைக் காட்ட வேண்டும்.

புறப்படும் நேரத்திலிருந்து முந்தைய 72 மணி நேரத்திற்குள் COVID-19 சோதனை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதனை பின்பற்ற தவறும் பயணிகளுக்கு உடனடியாக 500 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

படகுகள், விமானங்கள் மற்றும் ரயில்கள் என எந்த வழியில் வந்தாலும் இந்த விதிமுறைகளை பின்பற்றவேண்டும். இது பிரித்தனியா குடிமக்களுக்கும் பொருந்தும்.

வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிரித்தானியாவிற்கு வரும் ஒவ்வொரும் இந்த விதிமுறைகளுக்கு உட்படுவார்கள்.

அரசாங்கத்தின் travel corridors பட்டியலில் இல்லாத இடங்களிலிருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சோதனை செய்ய போதுமான வசதி இல்லாத அல்லது அதற்கு தொடர்பான சிக்கல்கள் உள்ள சில நாடுகளுக்கு ஆரம்பத்தில் விலக்கு அளிக்கப்படும்.

உதாரணமாக, செயின்ட் லூசியா, பார்படாஸ், ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலிருந்து வரும் பயணிகளுக்கு 6 நாட்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது.

பால்க்லேண்ட் தீவுகள், அசென்ஷன் தீவுகள் மற்றும் செயின்ட் ஹெலினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கப்படுகிறது.

விமானம், சர்வதேச ரயில் மற்றும் கடல் மார்க்கமாக சரக்குகளை ஏற்றிவரும் ஓட்டுனர்கள் போன்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு விலக்கு உண்டு.

"97% உணர்திறன் மற்றும் 99% விவரக்குறிப்புடன்" மற்ற வகை சோதனைகளைப் போலவே அனைத்து வகையான பி.சி.ஆர் சோதனையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்