பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் கடுமையான பொதுமுடக்கத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
உருமாறிய கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருவதால், அங்கு தேசிய அளவில் பொதுமுடக்கத்தை பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இருப்பினும் ஒரு சில மக்கள், இதன் விபரீதத்தை தெரியாமல் சாதரணமாக செல்வது, வருவதுமாக இருக்கின்றனர்.
இதன் காரணமாக, பிரதமர் போரிஸ் ஜோன்சன், பொதுமுடக்க நடவடிக்கைகளை சரியாக பின்பற்றவில்லை என்று, கடுமையான பொதுமுடக்கம் தேவைப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், அவர், கொரோனாவிற்கான புதிய விதிகளுக்கு மக்கள் கீழ்ப்படிவது மிகவும் நல்லது.
தலைமை மருத்துவர், றிஸ் விட்டி எச்சரித்தபடி, தற்போதைய கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அந்தளவிற்கு இல்லை, இருப்பினும், இன்னும் சில வாரங்களில் இந்த நோய் தொற்று மோசமானதாக மாறலாம் என்று கூறியிருந்தார்.
இதை பிரதமர் போரிஸ் ஜோன்சன், அது முற்றிலும் சரியானது என்று நினைக்கிறேன். தற்போது இருப்பது ஒரு ஆபத்தான தருணம் என்று நினைத்து கொள்ள வேண்டும். தடுப்பூசி இருப்பதை நாம் அறிய முடிகிறது.
புதிய விதிகளை வெளியிடுவதை விட, மக்கள் அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் முக்கியம்.
இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளை எல்லாம் பின்பற்றினால், மிகப் பெரிய வித்தியாசத்தை நாம் சந்திக்கலாம் என்று நம்புகிறோம். இதனால் இப்போது மக்கள் ஷாப்பிங் செய்யும் போது, வெளியில் செல்லும் போது மிகவும் கவனமுடன், செல்ல வேண்டும்.
மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்து, நோயைப் பரப்புவது பற்றி சிந்திக்க வேண்டும். அதிகபட்சமான விழிப்புணர்வு மற்றும் கெடுபிடி விதிமுறைகள் போன்றவைகள் மக்கள் சரியாக பின் பற்றவில்லை என்று நாங்கள் நினைத்தால், இன்னும் பல விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.