அரச குடும்பத்துடன் ஒன்றிணையும் ஹாரி-மேகன் மார்க்கல் தம்பதி! அதுவும் எந்த நாளில் தெரியுமா? கசிந்த தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
4205Shares

அரச குடும்பத்துடன் மீண்டும் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் இணையவுள்ளதாகவும், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஹாரி மற்றும் மேகன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு அரச குடும்பத்தில் இருந்து விலகி, அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தில் மகனுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் இந்த ஆண்டு அர குடும்பத்துடன் ஒன்றிணையவுள்ளனர்.

இந்த ஆண்டு, ஜுன் மாதம் 12-ஆம் திகதி லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளான்று நடைபெறும் அணிவகுப்பில் இந்த தம்பதி கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராணியின் 95-வது பிறந்தநாளையொட்டி Trooping of the Colour என்று அழைக்கப்படும் இராணுவ அணிவகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் (Coronavirus) தாக்கத்திற்கு பிறகு ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) முதல் தேசிய கொண்டாட்டமாகவும் இந்த அணிவகுப்பு நடைபெறும்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த நிகழ்ச்சியில் அரசக் குடும்பத்தினர் யாரும் கலந்துக் கொள்ளவில்லை. தனியாக இந்த அணிவகுப்பை ராணி எலிசபெத் ஏற்றுக் கொண்டார் .

தற்போதைய திட்டத்தின்படி, எலிசபெத் ராணியின் (பிறந்தநாள் அணிவகுப்பு லண்டனில் இயல்பாக நடைபெற வேண்டும்.

ஆனால், அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்