வேகமாக பரவும் பிரித்தானிய வகை கொரோனா: மிக மோசமாக தொற்றக்கூடியதன் காரணம் இதுதானாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
971Shares

வேகமாக பரவும் பிரித்தானிய வகை கொரோனா மிக மோசமாக தொற்றக்கூடியதன் காரணம் தெரியவந்துள்ளது.

திடீர் மாற்றம் பெற்ற அந்த பிரித்தானிய வகை கொரோனா, சாதாரண கொரோனாவை விட 70 சதவிகிதம் மோசமாக தொற்றக்கூடியதன் காரணம், அது மனிதனின் தொண்டையிலேயே வேகமாக இனப்பெருக்கம் செய்வதுதான் என அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.

இங்கிலாந்து சுகாதாரத்துறையும், பர்மிங்காம் பல்கலைக்கழகமும் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், திடீர் மாற்றம் பெற்ற கொரோனா நோயாளிகளின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சாதாரண கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மாதிரிகளில் இருந்ததைவிட மிக அதிக அளவில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால்தான் அது எளிதில் பரவுகிறது எனவும் கருதப்படுகிறது. ஆய்வின் தலைவரான Michael Kidd கூறும்போது, இந்த ஆய்வின் முடிவுகள், இந்த புதிய வைரஸ் தான் பாதித்த ஒவ்வொருவர் உடலிலும் எப்படி பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க உதவினாலும், அது ஏன் வேகமாக பரவுகிறது என்பதைக் கண்டுபிடிக்க அரிதாக உள்ளது என்கிறார்.

இந்த ஆய்வு மேலும் மற்ற ஆய்வுகளுடன் ஒப்பிடப்படவேண்டியுள்ளது என்றாலும், மாதிரிகளில் காணப்படும் அதிக அளவிலான வைரஸ், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தொற்றின் தீவிரத்திற்கும், வைரஸின் பரவும் திறனுக்கும் காரணமாக உள்ளது என கருதலாம் என்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்