பிரித்தானிய பாஸ்போர்ட்களில் முத்திரையிடப்பட்ட பிரச்சினை: ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
349Shares

பிரெக்சிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களின் பாஸ்போர்ட்களில் அந்த நாடுகள் முத்திரையிடுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ஐரோப்பிய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான வாழிட உரிமம் பெற்ற பிரித்தானியர்கள் பிரித்தானியாவுக்கு சென்றுவிட்டு தாங்கள் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு திரும்பும்போது, எல்லை அதிகாரிகள் அவர்களது பாஸ்போர்ட்களில் முத்திரையிட்டனர்.

உண்மையில் பிரித்தானியர்களின் பாஸ்போர்ட்களில் அவர்கள் முத்திரையிடத் தேவையில்லை, ஆனால், பிரெக்சிட் ஏற்படுத்தியுள்ள குழப்பத்தால் பலர் எதிர்பாராத விதமாக இந்த சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்த முத்திரையால் ஏற்பட்ட பிரச்சினை என்னவென்றால், Schengen பகுதி 90 நாள் விதி என்ற விதியின் அடிப்படையில், ஒருவரது பாஸ்போர்ட் முத்திரையிடப்பட்டுவிட்டால், அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சுற்றுலா வந்துள்ளவர் என்பதாகும்.

அப்படி முத்திரையிட்ட பாஸ்போர்ட்களைக் கொண்டவர்கள் 90 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றும் அதற்கு பொருள்.

ஆகவே, வாழிட உரிமம் பெற்றும் தங்கள் பாஸ்போர்ட்களில் முத்திரையிடப்பட்டதால், தாங்கள் 90 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்துடனேயே அந்த பிரித்தானியர்கள் நாட்களை செலவிடவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

இதற்காக விளக்கம் அளித்துள்ள ஐரோப்பிய ஆணையம், பிரெக்சிட் விலகல் ஒப்பந்தத்தின்படி, முதலாவது ஐரோப்பிய ஒன்றிய வாழிட உரிமம் பெற்ற பிரித்தானியர்களின் பாஸ்போர்ட்கள் முத்திரையிடப்பட தேவையில்லை என்றும், அப்படியே அவர்களுடைய பாஸ்போர்ட்கள் தவறுதலாக முத்திரையிடப்பட்டிருந்தாலும், அது அவர்களுடைய வாழிட உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஐரோப்பிய நாடுகளுக்குத் திரும்பும் பிரித்தானியர்கள் யாருக்காவது விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டால், அவர்கள் அதை சட்டப்படி எதிர்கொள்ளலாம் என்று, அதற்காக அவர்கள் செலவிட்ட தொகை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்