பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டுகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா
1635Shares

பிரித்தானியாவில் கடுமையைான ஊரடங்கு விதிக்கப்படுமா மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து தடுப்பூசி அமைச்சர் Nadhim Zahawi தகவல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் மூன்றாவது ஊரடங்கு ‘மிகவும் கடுமையானது’ மற்றும் ‘குறிப்பாக புதிய உருமாறிய வைரஸ் சமூக தொடர்புகள் மூலம் மிக எளிதாக பரவுகிறது.

எனவே மற்றவர்களுடன் பழகுவது மக்கள் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம் என Nadhim Zahawi கூறினார்.

மக்கள் உடற்பயிற்சி அல்லது தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்க வெளியே செல்லவதை உறுததி செய்ய வேண்டும். மற்ற படி வீட்டிலேயே இருங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் முகக் கவசம் அணிந்து வருகிறார்களா மற்றும் ஒரு வழி முறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.

அரசாங்கம் எந்தவொரு கடினமான கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பவில்லை, ஆனால் மக்கள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

இதன் மூலம் பிப்ரவரி நடுப்பகுதியில் தடுப்பூசி போட்டு அந்த இலக்கை எட்டும்போது வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்த விதிகள் மக்களுக்கு எதிராக திணிக்க வேண்டியவை அல்ல. அவை வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வந்து உயிரைக் காப்பாற்றுவதற்காக தான்.

பிப்ரவரி நடுப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை அரசாங்கம் வழங்கும்.

இந்த வாரம் ஏழு தடுப்பூசி மையங்கள் திறக்கப்படுவதால், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் 10 மைல் சுற்றளவில் தடுப்பூசி பெற முடியும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், மேலும் வரும் வாரங்களில் மேலும் திறக்கப்படும் என்றும் Nadhim Zahawi கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்