பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் விலக வேண்டும்! குவியும் எதிர்ப்பு: என்ன காரணம்?

Report Print Basu in பிரித்தானியா
759Shares

பிரித்தானியாவில் சமீபத்தில் நடந்த கருத்து கணிப்பில் பதிலளித்தவர்களில் 43% பேர் பிரதமர் பதவியலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவை கையாள்வது குறித்து விமர்சனங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், ஜனவரி 6-7 திகதிகளில் 2,003 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

பதிலளித்தவர்களில் குறைந்தது 43% பேர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள், அதே நேரத்தில் 40% அவர் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கன்சர்வேடிவ் வாக்காளர்களைப் பொருத்தவரை, அவர்களில் 87% பேர் போரிஸ் தொடர்ந்து தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர், வெறும் 7% பேர் மட்டுமே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் ஒட்டுமொத்த ஒப்புதல் மதிப்பீடு, தற்போது 37% ஆக உள்ளது, முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது ஒரு புள்ளி சரிந்துள்ளது.

பதிலளித்தவர்களில் 45% பேர் ஜான்சன் பிரதமராக பணியாற்றுவதை விரும்பவில்லை, முந்தைய கருத்துக் கணிப்பிலிருந்து ஒரு புள்ளி அதிகரித்துள்ளது.

கொரோனாவை ஜான்சன் கையாண்டது ஏமாற்றமளிப்பதாக 45% பேர் தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் 35% பேர் நெருக்கடியில் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததாக அவருக்கு பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்