பிரித்தானியாவில் வீட்டில் தனியாக இருந்த கோடீஸ்வர பெண்ணுக்கு 17 வயது சிறுவனால் நேர்ந்த கதி! பின் உணர்ச்சியற்று நின்ற சிறுவன்

Report Print Raju Raju in பிரித்தானியா
1770Shares

பிரித்தானியாவில் £1 மில்லியன் மதிப்பு கொண்ட சொகுசு பங்களாவில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Brighton-ஐ சேர்ந்த பெண் Sue Addis (69). இவர் பெரிய ஹொட்டல்களை நடத்தி வந்தார்.

Sue ஹொட்டலுக்கு பிரபலமான கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் அடிக்கடி வருவார்கள்.

கோடீஸ்வரரான Sue சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக பொலிசார் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதன்படி நபர் ஒருவருக்கும் Sueவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதன்பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பில் 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுவனும், Sueவும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுவன் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டான். அப்போது எந்தவொரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் அவன் நின்றிருந்தான்.

பின்னர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளான்.

உயிரிழந்த Sue நடத்தி வந்த ஹொட்டல்களின் மதிப்பு மட்டும் £6 மில்லியன் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்