பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 500-க்கும் மேற்பட்டோர் பலி! புதிய தொற்றால் ஒரு வாரத்தில் எத்தனை பேர் பாதிப்பு?

Report Print Santhan in பிரித்தானியா
671Shares

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 563 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பிரித்தானியாவில் புதிய வகையில் உருமாறி அதிவேகமாக பரவி வருகிறது.

இதனால் அங்கு தேசிய அளவில் மூன்றாவது முறையாக கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், பிரித்தானியாவில் கொரோனாவால் புதிதாக 54940 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 563 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,072,349 ஆக உள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பிரித்தானியாவில் கொரோனாவிற்கான நேர்மறையான சோதனை முடிவில் 28 நாட்களுக்குள் சுமார் 81,431 பேர் இறந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 29 முதல் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தினசரி விகிதம் 50000-க்கும் மேல் உள்ளன.

புதிய கொரோனா வைரஸ் தொற்றால், ஒரு வாரத்தில் சுமார் 60,000-பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில், கொரோனாவால் புதிதாக 417,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பிரித்தானியாவில் வாயதானவர்களுக்கு, இலையுதிர்காலத்தில் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி நாள் ஒன்றிற்கு 200,000 பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி போடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்