கடும் நெருக்கடியில் லண்டன்..திணறும் சுகாதாரத்துறை! பெருமிதத்துடன் லண்டன் பெருநகர காவல்துறை செய்த செயல்

Report Print Basu in பிரித்தானியா
770Shares

பிரித்தானியாவில் கொரோனாவால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் தலைநகர் லண்டன் சுகாதாரத்துறைக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் ஓட்ட காவல்துறை அதிகாரிகளை வழங்குவதாக பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் லண்டன் முழுவதும் உள்ள சுகாதார சேவை ஊழியர்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தைக் காண்பது மிகவும் கவலையளிக்கிறது என துணை உதவி ஆணையர் Matt Twist கூறினார்.

ஆனால் இந்த முக்கியமான நேரத்தில் லண்டன் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதரவை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

காவல்துறையினரின் நெஞ்சங்களில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மக்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் உந்துதல் உள்ளது

லண்டன் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதரிக்க முன்வந்த அதிகாரிகள் பெருமையுடனும், உயர்ந்த தொழில்முறையுடனும் செய்வார்கள் என்பது எனக்குத் தெரியும்.

மிகவும் சவாலான சில சம்பவங்களில் நகரம் முழுவதும் எங்கள் சுகாதார சேவை சகாக்களுக்கு ஆதரவளித்த நீண்ட வரலாற்றை லண்டன் பெருநகர காவல்துறை கொண்டுள்ளது.

தலைநகர் முழுவதும் ஆம்புலன்ஸை ஓட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தேரிவுசெய்யப்பட்ட 75 அதிகாரிகளை பெருநகர காவல்துறை வழங்கும்.

கொரோனா சவால்கள் இருந்தபோதிலும், லண்டன் மக்களுக்கு பெருநகர காவல்துறை வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொலிஸ் சேவையை தொடர்ந்து அளித்து வருவதால் எங்களால் இதைச் செய்ய முடிகிறது என துணை உதவி ஆணையர் Matt Twist கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்