பிரித்தானியாவில் லாக்டவுனுக்கு மத்தியில் அதிகமான நாய் திருட்டு: வெளிவந்த அதிரவைக்கும் உண்மைகள்

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
276Shares

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு நாய் திருட்டு வழக்கு இரட்டிப்பாக பதிவானதையடுத்து, இது குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

பிரித்தானியாவில் 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, நாய் திருட்டுபோனதாக 320 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இது அதற்கு முந்தைய ஆண்டினை விட இரட்டிப்பாகும். 2019- ஆம் ஆண்டு முழுவதும் பிரித்தானியாவில் மொத்தம் 170 நாய்கள் திருட்டுப்போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், 2020-ஆம் ஆண் இதுவரை இல்லாத 'மிக மோசமான ஆண்டு' என DogLost எனும் தன்னார்வ சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு, பலரை மன அழுத்ததிற்கு ஆளாக்கியதால், பலருக்கும் தங்கள் வீட்டில் விளையாடுவதற்கு, நேரத்தைக் கழிப்பதற்கு மற்றும் பல காரணங்களுக்காக ஒரு செல்லப்பிராணி தேவைப்பட்டிருக்கும்.

இதனால், விலை உயர்ந்த வளர்ப்பு நாய்கள் மற்றும் மற்ற வளர்க்கக்கூடிய மிருகங்களின் தேவை அதிகரித்திருக்கும்.

இந்த நிலையில், மிருகங்களை விற்று லாபம் பார்க்க நினைப்பார்கள், புதிய செல்லப்பிராணியை வளர்க்க விரும்பியவர்கள், அல்லது விலை உயர்ந்த நாய்களை வளர்த்து அதன் குட்டிகளை விற்று தொழில் செய்பர்களும் பூட்டுதலைப் பயன்படுத்தி இது போன்ற திருட்டில் ஈடுப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகினற்னர்.

இதனாலேயே, கடந்த ஆண்டு நாய் திருட்டு இரு மடங்காக அதிகரித்திருப்பதாககே கூறுகின்றனர்.

மேலும், 2020-ல் காணாமல் போன நாயை மீட்பதற்காக 125 சதவீதம் அதிகமான அழிப்புகள் வந்ததாக DogLost கூறுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இது குறித்தக்குற்றங்கள் அதிகரிப்பது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாய்கள் வீட்டை விட்டு தூரமாக சென்றாலும் திரும்பி உரிமையாளரிடம் வருவதற்கு சரியான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறும் DogLost, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்துகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்