NHS மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது.. பிரித்தானியாவில் மரணங்களை தடுக்க இதுதான் ஒரே வழி! தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா
588Shares

வாழ்நாளில் இதுவரை கண்டிராத அளவில் NHS ‘மிகவும் ஆபத்தான நிலையில்’ இருக்கிறது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி Chris Whitty எச்சரித்துள்ளார்.

சனிக்கிழமையன்று பிரித்தானியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 80,000-ஐத் கடந்ததை அடுத்து Chris Whitty இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் தடுப்பூசிகளை அதிகரிப்பதற்கு நாடு காத்திருக்கும் நிலையில், மரணத்தைத் தடுப்பதற்கான ஒரே வழி, பொதுமக்கள் வீட்டில் தங்குவது தான் என பேராசிரியர் கிறிஸ் விட்டி கூறினார்.

மருத்துவமனைகள் எப்போதும் குளிர்காலத்தில் பரபரப்பாக இருக்கும், ஆனால் தற்போது நாட்டின் சில பகுதிகளில் உள்ள NHS, யாரும் வாழ்நாளில் இதுவரை கண்டிராத அளவில் மிக ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்று பேராசிரியர் Chris Whitty கூறியுள்ளார்.

இதே நிலை தொடர்ந்தால், மருத்துவமனைகள் விரைவில் சிரமங்களுக்குள்ளாகிவிடும். நோயாளிகளுக்கான சுகாதார ஊழியர்கள் விகிதங்கள் ஏற்கனவே அதிகரித்துள்ளன, தீவிர சிகிச்சையில் கூட சமாளிக்க முடியாமல் போகக்கூடும் என எச்சரித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்