பிரித்தானியாவில் 3 மில்லியனைக் கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பூசி பிரச்சாரத்தில் இணைந்த முக்கிய பெரும்புள்ளிகள்!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
316Shares

பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 மில்லியனைக் கடந்துள்ள நிலையில், நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கான பிரச்சாரத்தில் போப் மற்றும் எலிசபெத் ராணி இணைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 59.937 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,035 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, அந்நாட்டில் இதுவரை மொத்தமாக 3,017,400 தொற்று பாதிப்புகளும், 80,868 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

கடந்த மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து, நாளுக்கு நாள் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதனால், பிரித்தானியாவில் மூன்றாவது முறையாக தேசிய உரடங்கு செயல்பாட்டில் உள்ளது.

கடந்த டிசம்பர் 27-ஆம் திகதி, தனது தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய பிரித்தானியா, இதுவரை நாடு முழுவதும் 1.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.

மேலும், வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு மேற்கொண்டுவருகிறது.

ஆனால், இதற்கிடையில் மருத்துவர்கள், செவிழியர்கள் உட்பட பலர் தடுப்பூசி போட்டுக்கோள்வதற்கு மறுப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3 மில்லியனைக் கடந்து சென்றுள்ளதால், அரசின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்காண விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இப்போது நாட்டின் முக்கிய பெரும்புள்ளிகளான போப் பிரான்சிஸ் மற்றும் ராணி எலிசபெத் II ஆகியோர் இணைந்துள்ளனர்.

ராணி எலிசபெத் II மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) தங்கள் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர். இதன்முலம் பிரித்தானியாவின் தடுப்பூசி திட்டத்தின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போப் பிரான்சிஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார். அடுத்த வாரம் வாட்டிகனில் தனது பிரச்சாரத்தை தொடங்கும்போது, தானும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்