பிரித்தானியா பிரதமருக்கு எம்.பிக்கள் எழுதியுள்ள கடிதம்! பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தும் படி கோரிக்கை

Report Print Santhan in பிரித்தானியா
397Shares

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு, அந்நாட்டு எம்.பிக்கள் இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ஆம் திகதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 45-வது நாளாக நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தியுள்ளது.

கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இருப்பினும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ஆம் திகதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

தலைநகர் டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக, லேசான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இருப்பினும் விவாசயிகள் அந்த குளிரிலும். மழையிலும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரித்தானியாவில் இருக்கும் எம்.பிக்கள் தங்கள் நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், டெல்லியில் போராடும் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணும் படி வலியுறுத்துங்கள் என்று 100-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்